Home /News /national /

ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு

ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

    ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

    கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், நோய் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகின்றது.

    இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் சொல்லப்படுகின்றது.

    இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் தாங்களாக முன்வந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அதேபோல டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஒரு வாரகால முழு ஊரடங்கை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

     

    முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஒரு பகுதியில் கொரோனா நோயாளிகளுக்காக, ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் ஆலை நிரிவாகம் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: CoronaVirus, Sterlite plant, Supreme court

    அடுத்த செய்தி