Home /News /national /

டர்புலன்ஸில் சிக்கி நடுவானில் விமானம் குலுங்கியது... 14 பயணிகள் காயம்... மன்னிப்பு கோரியது ஸ்பைஸ் ஜெட்!

டர்புலன்ஸில் சிக்கி நடுவானில் விமானம் குலுங்கியது... 14 பயணிகள் காயம்... மன்னிப்பு கோரியது ஸ்பைஸ் ஜெட்!

ஸ்பைஸ் ஜெட் விமானம்

ஸ்பைஸ் ஜெட் விமானம்

Spice Jet Turbulence Incident: தரையிறக்கத்தின்போது ஏற்பட்ட டர்புலன்ஸ் பிரச்னை காரணமாக இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது. பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது - ஸ்பைஸ் ஜெட் விளக்கம்

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் டர்புலன்ஸில் சிக்கி குலுங்கியது. இதில் பயணிகள் 14 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் நடந்த சம்பவத்திற்கு ஸ்பைஸ் ஜெட் மன்னிப்பு கேட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு போயிங் பி737 என்ற விமானம் நேற்று சென்று கொண்டிருந்தது. துர்காபூரை சென்றடைவதற்கு சற்று முன்பாக விமானத்தில் டர்புலன்ஸ் பிரச்னை ஏற்பட்டு, விமானம் குலுங்கத் தொடங்கியது.

நடு வானில் விமானம் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சியில் கத்தத் தொடங்கினர். சீட் பெல்ட்டுகள் அணிந்தும் பயணிகள் அங்கும் இங்கும் மோதலுக்கு ஆளானார்கள்.

இதையும் படிங்க - ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம் - 18 பேர் மருத்துவமனையில் அனுமதி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

விமானத்தில் மின் சாதன அமைப்புகள், சார்ஜிங் போர்டுகள், ஏ.சி. அமைப்புகள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்தன. அதிலிருந்து வயர்கள் வெளியே வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவங்களை பயணிகளில் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அவை வைரலாகியுள்ளன.

இதையும் படிங்க - நாடு முழுவதும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.100க்கு மேல் உயர்வு

தண்ணீர் பாட்டில்கள், கோப்பைகள் உள்ளிட்டவை சிதறிக் கிடக்கும் காட்சிகளை வீடியோவில் காண முடிகிறது. இந்த சம்பவத்தில் மொத்தம் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கூறியுள்ளது.



இதுதொடர்பாக அதன் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது-
தரையிறக்கத்தின்போது ஏற்பட்ட டர்புலன்ஸ் பிரச்னை காரணமாக இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது. பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது. துரதிருஷ்டவசமாக நடந்த இந்த சம்பவத்திற்கு ஸ்பைஸ் ஜெட் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமானங்கள் பறக்கும்போது காற்று அழுத்த மாறுபாடு காரணமாக சில நேரங்களில் குலுங்கும். இதனை பொதுவாக டர்புலன்ஸ் என்று அழைக்கிறார்கள். இது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமாக இருந்தாலும், இப்போது நடந்திருப்பது சற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: SpiceJet

அடுத்த செய்தி