புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் இல்லத்தை இணைக்க சுரங்கப்பாதை

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் இல்லத்தை இணைக்க சுரங்கப்பாதை

சென்ட்ரல் விஸ்டா புரோஜெக்ட்.

சுரங்கப்பாதை அமைப்பதின் பின்னணியில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற வளாகத்தின் பிற நடவடிக்கைகளுக்கும் விவிஐபிக்களின் புழக்கத்துக்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செய்யப்படுவதற்காக இந்த சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன.

  • Share this:
    விரைவில் எழுப்பப்படவிருக்கும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர், துணை குடியரசுத்தலைவர், எம்.பி.க்களின் அறையை இணைக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது.

    `சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்' என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தின் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

    சுரங்கப்பாதை அமைப்பதின் பின்னணியில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற வளாகத்தின் பிற நடவடிக்கைகளுக்கும் விவிஐபிக்களின் புழக்கத்துக்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செய்யப்படுவதற்காக இந்த சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன.

    நாடாளுமன்ற புதிய வளாக விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமரின் புதிய இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் தெற்கு பிளாக் பகுதியில் வரவிருக்கிறது. துணைக்குடியரசுத் தலைவரின் இல்லம் வடக்குப் புறத்தில் இருக்கும். தற்போது இருக்கும் போக்குவரத்து மற்றும் ஷ்ரம் சக்தி பவன்கள் இருக்கும் இடத்தில் எம்.பி.க்களின் அறைகள் வரவிருக்கிறது.

    சுரங்கப்பாதை ஒரு வழிச் சந்தாக இருக்கும் இது குறிப்பிட்ட விவிஐபிக்கள் புழங்க மட்டுமே என்று தெரிகிறது. ஆனால் ராஷ்ட்ரபதி பவனிலிருந்து இத்தகைய இணைப்பு தேவையில்லை என்று கட்டிட வடிவமைப்பாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் இது கொஞ்சம் தொலைவில் உள்ளது. மேலும் ஜனாதிபதி நாடாளுமன்றத்து வருவது முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதால் சுரங்க இணைப்பு தேவையில்லை என்று கருதுகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் புழக்கத்துக்கும் ஏதுவாக இருக்க வேண்டும் என்பதால் விவிஐபிக்கள் சுரங்க வழியைப் பயன்படுத்துவதில் யாருக்கும் சிரமம் இருக்காது, பாதுகாப்பு பிரச்சினைகளும் தீருமென்று விஸ்டா கட்டுமான திட்ட அதிகாரிகள் கருதுகின்றனர்.

    குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சி தினத்தன்று மட்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் வழியைப் பயன்படுத்தவும் மற்ற நாட்களில் சுரங்க வழியையும் பயன்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    விவிஐபிக்களின் பாதுகாப்பினால் பொதுமக்கள் புழக்கத்துக்கு இடையூறு ஏற்படுகிறது, இதைத்தவிர்க்கவே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    இதனையடுத்து புதிய பிரதமரின் இல்லம், எம்.பி.க்களின் அறை, துணைக்குடியரசுத் தலைவர் இல்லம் ஆகியவை வளாகத்தில் சுரங்கப்பாதை மூலம் இணைக்கக் கூடிய தூரத்தில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    புதிய நாடாளுமன்றக் கட்டடம் 2022-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு தயாராகும் என்றுதெரிகிறது.
    Published by:Muthukumar
    First published: