• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சட்டமன்றத்தில் பிரிட்டிஷார் காலத்திய ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு..

சட்டமன்றத்தில் பிரிட்டிஷார் காலத்திய ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு..

ரகசிய சுரங்கப்பாதை

ரகசிய சுரங்கப்பாதை

சுதந்திர போராட்ட வீரர்களை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் அழைத்து வருவதற்காக இந்த ரகசிய சுரங்க வழியை பிரிட்டிஷார் பயன்படுத்தியுள்ளனர்.

  • Share this:
ரகசிய சுரங்கப் பாதை போன்ற கட்டமைப்பு ஒன்று, பழைய இந்திய பாராளுமன்றமாக திகழ்ந்த, இப்போதைய டெல்லி சட்டமன்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை ரகசியமாக அழைத்துச் செல்ல பயன்பட்டதாக தகவல்.

நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷார் ரயில் தடம், கட்டடங்கள், மலை வாசஸ்தலங்கள் என பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தினர். இவை வரலாற்று மிச்சங்களாக இன்றளவும் நம் கண்முன்னே இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் கண்களால் பார்க்க இயலாத வகையில் சில ரகசிய சுரங்கங்களையும் பிரிட்டிஷார் தங்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தி வைத்திருந்தனர். அது போன்ற கட்டமைப்பு ஒன்று டெல்லியின் சட்டமன்ற வளாகத்தில் இன்று கண்டறியப்பட்டிருக்கிறது.

டெல்லி சட்டமன்ற வளாகத்தினுள் இந்த ரகசிய சுரங்கத்தின் முகப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சுரங்கம் வழியாக அங்கிருந்து டெல்லி செங்கோட்டை வரை செல்ல முடியும் என கூறப்படுகிறது.

ரகசிய சுரங்கம் கண்டறியப்பட்டது குறித்து பேசிய டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கூறுகையில், 1993ம் ஆண்டு நான் எம்.எல்.ஏவாக ஆன போது சட்டமன்ற வளாகத்தில் ஒரு ரகசிய சுரங்கம் இருப்பதாக ஒரு பேச்சு இருந்தது. அந்த சுரங்கத்தின் வழியாக செங்கோட்டை வரை செல்ல முடியும் என கூறுவார்கள், நான் அந்த வரலாற்றை தேடிப் போனேன், என்னால் அதனை அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.

Also read:  ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ – பயணிகள் அதிர்ச்சி!

இன்று அந்த சுரங்கத்தின் வாசலை கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால் இதனை நாங்கள் தோண்டப்போவதில்லை. இந்த சுரங்கத்தின் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயில் வேலைகளினாலும், கழிவுநீர் குழாய் பதிப்பு வேலைகளினாலும் சேதமாகியுள்ளன.

ரகசிய சுரங்கம்


சுதந்திரத்துக்கு முன்னர் பிரிட்டிஷார் கொல்கத்தாவில் இருந்து தங்களின் தலைநகரை டெல்லிக்கு மாற்றிய போது 1912ம் ஆண்டுவாக்கில் இப்போதைய டெல்லி சட்டமன்றம் அந்தக் காலத்தில் இந்திய பாராளுமன்றமாக திகழ்ந்தது. பின்னர் 1926ம் ஆண்டு இந்த கட்டடத்திற்குள் சுதந்திர போராட்ட வீரர்களை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் அழைத்து வருவதற்காக இந்த ரகசிய சுரங்க வழியை பயன்படுத்தியுள்ளனர். இங்கே ஒரு ரகசிய தூக்கு போடும் அறை இருப்பதையும் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதை திறந்து பார்த்தது கிடையாது என்றார்.

Also read:  பாராளுமன்ற கமிட்டி ஒழித்துக்கட்ட நினைக்கும் விபிஎன் சேவை என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து?

ஆனால் இப்போது நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி அந்த அறையை சோதனையை செய்ய நான் நினைத்தேன். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்தும் விதத்தில் சுதந்திர வீரர்களின் கோவிலாக அந்த அறையை மாற்ற முடிவு செய்துள்ளோம்.

நாட்டின் சுதந்திர போராட்டத்தில் டெல்லி சட்டமன்றத்துக்கு இருக்கும் தொடர்பை கருத்தில் கொண்டு, பிரிட்டிஷார் பயன்படுத்திய இந்த தூக்கு போடும் அறையை பொதுமக்களின் பார்வைக்காக அடுத்த ஆண்டு சுதந்திர தினம் முதல் திறந்து விட முடிவு செய்து அதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாக சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: