கேரளா மாநிலத்தில் டியூஷன் படிக்க வந்த மாணவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் நடவடிக்கையில் சமீப காலமாகவே சில மாற்றங்கள் தென்பட்டது. இதை கவனித்த அப்பள்ளியின் ஆசிரியர்கள் மனநல ஆலோசனை வழங்க மாணவனை அழைத்து பேச்சு கொடுத்தனர்.
முதலில் மாணவன் ஆசிரியர்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் கூறிவில்லை. இந்நிலையி்ல, ஆசிரியர்கள் பல விதமாக பேசி மாணவனிடம் இருந்து உண்மையை வரவழைத்துள்ளனர். மாணவர் கூறிய பதில் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாணவர் ஒரு ஆசிரியை இடம் டியூஷன் படிக்கும் நிலையில், அவர் மாணவனுக்கு மது பழக்கத்திற்கு ஆளாக்கி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியுள்ளார். இதனால் அந்த மாணவன் பாதிப்பு அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆசிரியை மீது காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Pocso, Sexual abuse