சசிகலா உடல்நிலையை அறிய டி.டி.வி.தினகரன் பெங்களூரு பயணம்

சசிகலா உடல்நிலையை அறிய டி.டி.வி.தினகரன் பெங்களூரு பயணம்

டிடிவி தினகரன்

சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    சசிகலா உடல்நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், உறவினரும் குடும்ப மருத்துவருமான டாக்டர்.சிவகுமார் பெங்களூருக்கு பயணமாகியுள்ளனர்.

    சசிகலாவை சந்திக்க தினகரன் சிறைத்துறையினரிடம் அனுமதி கோரி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மருத்துவமனை வளாகத்தில், அமமுக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என நூற்றுக் கணக்கானோர் திரண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... ஆக்சிஜன் அளவு குறைந்தது: சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

    இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கும் நிலையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செலுத்தி அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: