சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பது என்பது சசிகலா விடுதலையை அங்கும், சென்னையிலும் அவர்கள் கொண்டாடுவதாகதான் நான் பார்க்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவர்களின் அறிவுறுத்தலை பெற்று சசிகலாவை தமிழகம் அழைத்தும் செல்லும் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார். இந்த விழாவிற்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதே சமயத்தில் சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவந்த சசிகலா, இன்று விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில நாட்கள் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்தவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க.... முறைப்படி விடுதலை செய்யப்பட்டார் சசிகலா: ஆதரவாளர்கள் உற்சாகம்
சசிகலா விடுதலை செய்யப்பட்டதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, ஈரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மேலும் படிக்க... வி. கே. சசிகலா விடுதலை ஆனார்... பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் குவிந்த ஆதரவாளர்கள்
இதேபோல, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சீனிவாசன் தலைமையில், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தில்லைநகர் அருகே ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் படிக்க... சசிகலாவிற்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என அறிவிப்பு
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகில் கட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல ஆங்காங்கே தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Sasikala, TTV Dhinakaran