சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை நன்றாக கவனித்து வருவதாகவும் நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மூச்சுத் திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆக்சிஜன் செலுத்தி அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது ஆடி பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மருத்துவர்கள் சசிகலாவை நன்றாக கண்காணித்து வருகின்றனர்’ என்றும், ஆடி பிசிஆர் சோதனையின்படி அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறப்படுவதை கூட்டிக்காட்டியும் பேசினார். சசிகலாவிற்கு காய்ச்சல் உள்ளிட்ட வேறு சில பாதிப்புகள் இருப்பதாக அப்போது தெரிவித்தார்.
மேலும் படிக்க... ஆக்சிஜன் அளவு குறைந்தது: சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
மேலும், சிடி ஸ்கேன் தேவையா என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும், கடந்த சில நாட்களாக சசிகலாவிற்கு காய்ச்சல் இருந்ததாகவும், அவரின் உடல்நிலை மோசமானதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.
சசிகலாவிற்கு, வேறுசில பாதிப்புகள் இருந்ததாலேயே ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டதாகவும் தினகரன் அப்போது தெரிவித்தார். மருத்துவர்கள் சசிகலாவை நன்றாக கண்காணித்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அவரை சந்திக்க முயற்சிப்பதாகவும், அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.
சசிகலா 27ஆம் தேதி விடுதலையாகி ஆரோக்கியமாக வெளியே வருவார் என்று நம்பிக்கை தெரிவித்த தினகரன், அவரது வருகையை தமிழ்நாட்டு மக்களும், கட்சி உறுப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார். அப்போது சசிகலாவிற்கு நாங்கள் சிறப்பான முறையில் வரவேற்பு கொடுப்போம் என்றும் கூறினார்.
கொரோனா கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு தொண்டர்கள் சசிகலாவிற்கு வரவேற்பு கொடுப்பார்கள் எனவும் தினகரன் அப்போது தெரிவித்தார்.