ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓடும் ரயிலில் ஜெர்மன் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்த ரயில்வே

ஓடும் ரயிலில் ஜெர்மன் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்த ரயில்வே

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பொது வகுப்பு பெட்டியில் பயணித்த பெண் பயணிக்கு ஏசி வகுப்பு பெட்டியில் பயணிக்க ஏற்பாடு செய்து தருவதாக டிடிஇ விஷால் சிங் இந்த பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெர்மனி நாட்டு பெண்ணிடம் ரயில் டிக்கெட் பரிசோதகர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து ஜெய்பூர் நோக்கி சென்ற விரைவு ரயிலில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 24 வயது பெண் பயணித்துள்ளார். இதே ரயிலில் டிக்கெட் பரிசோதகராக விஷால் சிங் ஷெகாவத் என்ற ரயில்வே ஊழியரும் வந்துள்ளார்.

இந்த பெண் பொது வகுப்பு பெட்டியில் பயணித்து வந்த நிலையில், அவருக்கு ஏசி வகுப்பு பெட்டியில் பயணிக்க ஏற்பாடு செய்து தருவதாக டிடிஇ விஷால் சிங் அந்த பெண்ணுக்கு வாக்குறுதி தந்துள்ளார். அந்த பெண்ணும் நம்பி சென்ற போது, ஆள் இல்லாத பகுதியில் வைத்து பெண்ணிடம் விஷால் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து ரயில்வே குறைதீர்ப்பு ஆன்லைன் போர்ட்டலில் டிசம்பர் 16ஆம் தேதி புகார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கணவர் சண்டையை சரிசெய்ய மந்திரவாதி உதவி.. பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி.. கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி!

அதன் அடிப்படையில் ஜெய்ப்பூர் ரயில்வே காவல்துறை விஷால் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், விஷாலை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் தனது புகார் குறித்து நீதிபதி முன்னர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Rajasthan, Sexual abuse, Sexual harassment, Train