தனியார் நிறுவனம் ஒன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வித்தியாசமான கவர்ச்சி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தில், ஒருவர் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 116 செலுத்தினால் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்து செல்வோம். அங்கு 5 நட்சத்திர ஓட்டலில் ( 5 Star Hotel ) தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்திருந்தனர். இவை ஒரு பக்தருக்கான செலவுகள் மட்டுமே.
இந்த கவர்ச்சிகரமான விளம்பரம் குறித்து தற்போது திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. அதில், வி.ஐ.பி. தரிசனத்தை நேரடியாக வி.ஐ.பி.களுக்கும், அவர்களின் சிபாரிசு கடிதம் கொண்டுவருபவர்களுக்கும் மட்டுமே வழங்கி வருகிறோம். இதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது சுற்றுலா நிறுவனங்களுக்கோ வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படாது. இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களை செய்யும் கும்பலை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளது.
தேவஸ்தானம்
மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயரில் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதன்மூலம் யார் வேண்டுமானாலும் ரூ.10,500 செலுத்தி இந்த டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
இது ஆன்லைன் மூலமாக கிடைக்கிறது என கூறியுள்ளது. ரூ.10 ஆயிரம் நன்கொடையாகவும், ரூ.500 டிக்கெட் விலை எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானமே செய்து கொடுக்கிறது என தெரிவித்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.