Home /News /national /

ஏப்ரல் மாதம் திருப்பதி செல்ல திட்டமா? அப்ப இதை கண்டிப்பா படிங்க!

ஏப்ரல் மாதம் திருப்பதி செல்ல திட்டமா? அப்ப இதை கண்டிப்பா படிங்க!

திருப்பதி

திருப்பதி

Tirupati Devasthanams | ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழை கொண்டுவருவது கட்டாயமாகும்.

  • News18
  • Last Updated :
    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான கட்டண டிக்கெட்டுகளை இம்மாதம் 20-ம் தேதி ஆன்லைனில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    20ஆம் தேதி காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்றும், மின்னணு முறையில் நடத்தப்படும் குலுக்கள் மூலம் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யார் யாருக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய அறிவிப்புகள் தேவஸ்தான வெப்சைட்டிலும் வெளியிடப்படும்.

    கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் அல்லாது நேரடியாக முன்பதிவு செய்யலாம்.

    Also read... Gold Rate: வார இறுதியில் குறைந்தது தங்கம் விலை... இன்று (மார்ச் 19. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழை கொண்டுவருவது கட்டாயமாகும்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tirumala Tirupati

    அடுத்த செய்தி