திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி

300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மூலம், 20,000 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

 • Share this:
  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்துக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.

  கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருமலையில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலவச தரிசன டிக்கெட் மூலம், நாள்தோறும் 10, 000 உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மூலம், 20 ,000பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

  இதன்படி, ஜனவரி 4-ம் தேதி முதல்  31-ம் தேதி வரையான காலத்துக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணிமுதல் இணையதளம் மூலம் டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3-ம் தேதி முதல் நாள்தோறும் 6,000 வெளியூர் பக்தர்களுக்கு இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: