திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேங்கியுள்ள சில்லரை ரூபாய் மூட்டைகளை காலி செய்ய, வங்கிகளுக்கு புது ஆஃபர் ஒன்றை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதன் பொருட்டு பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
தினமும் சுமார் மூன்று கோடி ரூபாயை கோவில் உண்டியலில் காணிக்கையாக பெறப்படுகிறது. பக்தர்கள் சமர்பிக்கும் காணிக்கையில் இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டும் அல்லாமல் சில்லரை நாணயங்கள், வெளி நாடுகளின் நாணயங்கள், ,தங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இடம் பெறுகின்றன.
ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திய வெளி நாட்டு சில்லரை நாணயங்களை மாற்ற இயலாமல் தேவஸ்தானம் திணறி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய நாணயங்களையும் பக்தர்கள் ஏழுமலையானைக்கு கோவில் உண்டியலில் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை நாட்டில் சில்லறை நாணயங்களுக்கு தட்டுப்பாடு இருந்து வந்தது. தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு சில்லறை நாணயங்கள் ஓரளவுக்கு புழக்கத்தில் உள்ளது.
இதனால், சில்லரை நாணயங்களை வழக்கமாக வாங்கும் வங்கிகள் அவற்றை புறக்கணிக்கத் துவங்கியுள்ளன. எனவே திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலம், ஏழுமலையான் கோவில் ஆகியவற்றில் மூட்டை மூட்டையாக சில்லரை நாணயங்கள் தேங்கி கிடக்கின்றன.இருப்பில் இருக்கும் சில்லறை நாணயங்களை மாற்ற தேவஸ்தானம் எடுத்த முயற்சிகளுக்கு சரியான பலன் கிடைக்கவில்லை.
எனவே, சில்லறை நாணயங்களை வாங்கிக்கொள்ளும் வங்கிகளுக்கு ஊக்க பரிசு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி பேசிய தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, வங்கிகள் தேவஸ்தானத்தில் இருந்து வாங்கி கொள்ளும் சில்லரை நாணயங்களின் மதிப்புக்கு சமமான தொகையை அந்த வங்கியின் தேவஸ்தானம் டிபாசிட் செய்யும் என்று கூறினார்.
தேவஸ்தானத்தில் இருந்து பணம் டெபாசிட் செய்யப்படும் என்பதால், வங்கிகள் தேவஸ்தானத்தில் இருந்து சில்லறை நாணயங்களை வாங்கி கொள்ளும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.