Home /News /national /

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: இன்று ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: இன்று ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

உபி தேர்தல்

உபி தேர்தல்

UP Assembly election: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

    உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் (Uttar pradesh Election)  7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    431 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ம் தேதியும் 2ம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ம் தேதியும், 3ம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20ம் தேதியும் 4ம் கட்ட வாக்குப்பதிவு  பிப்ரவரி 23, 5ம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, 6ம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதுவரை மொத்தம் 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி மக்களவைத் தொகுதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் ஆசம்கர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதையும் படிக்க: NSE முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கைது: பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை

    இதில், 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  உத்திர பிரதேசத்துடன் சேர்த்து பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் வியாழன் (மார்ச் 10) எண்ணப்படவுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Election, Election 2022, Uttar pradesh

    அடுத்த செய்தி