நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என காலந்தோறும் நிரூபித்துக்கொண்டே உள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் தனது உரிமையாளருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் நாய் ஒன்று அவரது உயிரை காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.
பிரையன் என்ற நபர் சாடி என பெயரிடப்பட்ட விசுவாசமான நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். பிரையனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பார்த்த சாடி அவர் பக்கத்திலேயே தங்கி அவருக்கு மயக்கம் ஏற்படாமல் இருக்க அவரது முகத்தை தொடந்து நக்கியுள்ளது. மேலும் அவசர சேவைகளை பெற அழைக்கும்படி நாய், பிரையனின் தொலைபேசியை அவர் அருகே எடுத்து வந்து போட்டுள்ளது. இந்த சம்பவம் நியூ ஜெர்சியில் நிகழ்ந்தது. இதனையடுத்து மருத்துவமனைக்கு பிரையன் கால் செய்த நிலையில் ஊழியர்கள் உடனடியாக வருகை தந்து, அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் பிரையன் இப்போது குணமாகி வருகிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், எஜமானரின் உயிரைக் காப்பாற்றியதற்காக அந்த நாய் ஏராளமானோரின் அன்பைப் பெற்று வருகிறது. ஏராளமானோர் "சாடிக்கு நன்றி" என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் இருக்கும் பிரையன் ஒவ்வொரு இரவும் வீட்டில் இருப்பவர்களுக்கு கால் செய்து சாடியை வீடியோவில் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாடியை சந்திக்க காத்திருப்பதாக பிரையன் கூறியுள்ளார்.
ரமாபோ-பெர்கன் விலங்கு புகலிடம் தற்போது பிரையனின் பெற்றோருடன் வசித்து வரும் "ஹீரோ" நாயின் படத்தை பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளது. ஆறு வயது சாடியை குழந்தையில் இருந்து பிரையன் வளர்க்கவில்லை, அவரது வீட்டில் முன்னாள் இருந்த நபர் ஒருவர் இந்த நாயை வளர்த்த நிலையில் அவர் வேறு வீட்டிற்கு சென்றதால் சாடியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த பிரையன், சாடியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
பிரையன் சாடிக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்தார். அதன் பின்னர் சாடி, பிரையன் மீது அன்பாகவும், விசுவாசமாகவும் இருந்துள்ளது. அதன் பலனாக பிரையன் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளார். பிரையனின் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் சாடி நெட்டிசன்கள் ஆதரவை பெற்றுள்ளது. விசுவாசமுள்ள நாய்கள் மனிதர்களை காப்பாற்றுவது இது முதல்முறை அல்ல, கடந்த ஆண்டு செப்டம்பரில், ஜாக்ஸ் என்ற நாய் அவரது எஜமானியை காப்பாற்றிய வீடியோ வைரலானது. அதில், ஜாக்ஸ் குடிபோதையில் இருந்த அவரது உரிமையாரை கீழே விழாமல் தடுத்து காயமடையாமல் படுக்கையில் உட்கார வைக்க உதவியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.