Live Update: குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

Live Update: குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!
கர்நாடக எம்எல்ஏக்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: July 23, 2019, 7:34 PM IST
  • Share this:
கர்நாடகா சட்டசபையில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

கர்நாடகாவில் ஆளும் அரசைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால், அந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாள்கள் கடத்தப்பட்டன. இந்தநிலையில், தற்போது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது.


தற்போது, அவை எண்ணிக்கை 209 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிருபிக்க 105 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. பா.ஜ.கவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ், ஜே.டி.எஸ் கூட்டணிக்கு 100 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. காங்கிரஸ், மதச்சார்ற்ற ஜனதா தள கூட்டணி எம்.எல்.ஏக்கள் அனைவரும் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
First published: July 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading