காந்தியின் லட்சியப்படி... ராஜ்காட் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டிரம்ப்

காந்தியின் லட்சியப்படி... ராஜ்காட் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டிரம்ப்
ராஜ்காட்டில் டிரம்ப்
  • Share this:
டெல்லி ராஜ்கோட்டிலுள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்ற அவர், பார்வையாளர் குறிப்பில் காந்தி குறித்து எழுதியுள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் காலை 10 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றனர். அவரது மகள் இவாங்கா டிரம்பும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அவர்களை, பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் இணைந்து வரவேற்றனர். இருவருக்கும் முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அவர்கள் ராஜ்கோட்டிலுள்ள காந்தி நினைவிடத்துக்கு டொனால்ட் டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் சென்றனர். அங்கே, அவர்கள் காந்தியின் நினைவிடத்தில் மலர்வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், டிரம்பும் மெலனியா டிரம்பும் இணைந்து ஒரு மரத்தை நட்டனர்.


காந்தி நினைவிடத்திலுள்ள பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய டிரம்ப், ‘மகாத்மா காந்தியின் லட்சியத்தின்படி, மதச்சார்பற்ற மற்றும் அதிசயிக்கத்தக்க இந்தியாவுடன் அமெரிக்க உறுதியாக இணைந்து நிற்கின்றனர். இதுமிகப் பெரிய கௌரவம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்