ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடும்பத்துடன் தாஜ்மஹால் அழகை ரசித்த டிரம்ப்: புகைப்படம் எடுத்து மகிழ்ந்த இவாங்கா

குடும்பத்துடன் தாஜ்மஹால் அழகை ரசித்த டிரம்ப்: புகைப்படம் எடுத்து மகிழ்ந்த இவாங்கா

டிரம்ப்

டிரம்ப்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உத்தரப் பிரதேசமான ஆக்ராவில் உலக அதிசயமான தாஜ்மகாலை டொனால்ட் டிரம்ப், தனது குடும்பத்தினருடன் சென்று கண்டு மகிழ்ந்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு, ஆக்ரா வந்த டிரம்ப்புக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப்பை உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து டிரம்பை வரவேற்று விமானநிலையத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராமிய கலை நிகழ்ச்சிகளை டிரம்ப் கைதட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தாஜ்மகால் நோக்கி சென்ற டிரம்புக்கு வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். பின்னர் தாஜ்மகாலை டிரம்ப் தனது மனைவி மெலானியுடன் இணைந்து பார்வையிட்டார். அவர்களுக்கு வழிகாட்டி நிதின் சிங் தாஜ்மகாலின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

இவாங்கா

தாஜ்மகால் முன்பு நின்று டிரம்ப் மற்றும் மெலானியா புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இதேபோல் இவாங்கா டிரம்ப் தனது கணவர் ஜெராட் குஷ்னருடன் இணைந்தும், தனித்தும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தார்.

தாஜ்மகாலின் பதிவேட்டில், இந்தியாவின் வளமையான வேறுபட்ட அழகின் ஆதாரமாக தாஜ்மகால் விளங்குவதாக டிரம்ப் எழுதி கையெழுத்திட்டார். தாஜ்மகாலை சுற்றி பார்த்த பின் டெல்லி சென்ற டிரம்ப், ஐடிசி மவுரியா விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.

பயணத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் ராணுவ மரியாதையுடன் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படுகிறது.  காலை 10.30 மணிக்கு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை செலுத்துகிறார். காலை 11 மணிக்கு ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - டிரம்ப் இடையிலான சந்திப்பு நடைபெறுகிறது.

இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பகல் 12.40 மணிக்கு இருநாடுகள் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். மாலை 7.30 மணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கும் விருந்தில் டிரம்ப் பங்கேற்கிறார். இரவு 10 மணிக்கு தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் புறப்படுகிறார்.

Also see:

First published:

Tags: Trump India Visit