அமெரிக்காவிற்குத் தேவையான ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்க வேண்டும்: மோடியிடம் டிரம்ப் வலியுறுத்தல்

கொரோனாவை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து முழு வலிமையை பயன்படுத்தி எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக மோடி தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவிற்குத் தேவையான ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்க வேண்டும்: மோடியிடம் டிரம்ப் வலியுறுத்தல்
டிரம்ப்
  • Share this:
கொரோனாவைத் தடுக்க அமெரிக்காவிற்குத் தேவையான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா சூழலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நேற்று விரிவாக கலந்துரையாடினர். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை அமெரிக்கா பயன்படுத்த இருப்பதாகவும், அதற்கு தேவையான மருந்தை இந்தியா வழங்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

தன்னுடையை கோரிக்கையை ஏற்று அந்த இரண்டு மருந்துகளையும் ஏற்றுமதி செய்ய பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாகவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையே, அதிபர் டிரம்புடனான உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து முழு வலிமையை பயன்படுத்தி எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

Also see...










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading