இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன், மனைவி மற்றும் மகள் வந்துள்ளனர்.
அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், கார் மூலம் அனைவரும் சபர்மதி ஆசிரமம் சென்றடைந்தனர்.
சாலையின் இருபுறமும் கலைநிகழ்ச்சிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. சபர்மதி ஆசிரமம் சென்றடைந்த டிரம்ப், அங்கு தனது மனைவியுடன் நூல் நூற்றார்.
பின்னர், சபர்மதி ஆசிரமத்தை பிரதமர் மோடி அவர்களுக்கு சுற்றிக்காட்டினார். காந்தி பற்றியும் அவர் எடுத்துக்கூறினார்.
இதனை அடுத்து, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், “எனது நண்பர் மோடிக்கு நன்றி, இந்த இடத்தை சுற்றிக்காட்டியதற்காக” என்று டிரம்ப் எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.