முகப்பு /செய்தி /இந்தியா / விண்வெளி, உள்நாட்டு பாதுகாப்பு...! இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்

விண்வெளி, உள்நாட்டு பாதுகாப்பு...! இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்

அகமதாபாத்தில் வரையப்பட்டுள்ள சுவரோவியம் (Reuters)

அகமதாபாத்தில் வரையப்பட்டுள்ள சுவரோவியம் (Reuters)

  • Last Updated :

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வர உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே, வணிகம், விண்வெளி உள்ளிட்ட பல துறைகளின் கீழ் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வர உள்ளார். சற்று நேரத்தில் அகமதாபாத் விமான நிலையத்தை அவரது பிரத்யேக விமானம் வந்தடைய உள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் அவர் உரையாற்ற உள்ளார். பின்னர், சமர்பதி ஆசிரமம், தாஜ்மஹால் ஆகிய இடங்களுக்கும் அவர் செல்கிறார்.

ட்ரம்ப் வருகையின் போது இரு நாடுகளுக்கு இடையே பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவுசார் சொத்துரிமை, வணிக வசதியை மேம்படுத்துதல், உள்நாட்டு பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

top videos

    First published:

    Tags: Trump India Visit