குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்பதாக டொனால்ட் டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தந்த அவர், சபர்மதி காந்தி ஆசிரமம், மொதோரா மைதானம், தாஜ்மகால் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
இன்று இரவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டொனால்ட் டிரம்புக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இரவு விருந்து முடிந்து 10 மணி அளவில் தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு டிரம்ப் புறப்படுகிறார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trump India Visit