TRS WINS GHMC ELECTION BUT BJP WINS BATTLE FOR HYDERABAD VIN
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது
ஹைதராபாத் மாநகராட்சியில் பாஜக தலைவர்கள் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடுகிறார்கள்
இரவு நிலவரப்படி ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 55 இடங்களில் வென்றது. பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்து வலுவாக கால் பதித்தது.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 150 இடங்களில் 55 இடங்களில் ஆளும் டிஆர்எஸ் போராடி வென்று அதை கைப்பற்றியது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 150 வார்டுகளுக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பழைய மலக்பேட் வார்டிற்கு மட்டும் வியாழக்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தமாக 150 வார்டுகளிலும் 46 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நிலவரப்படி ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 55 இடங்களில் வென்றது. பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்து வலுவாக கால் பதித்தது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 44 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்றதால் மாநில தலைவர் உத்தம் குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்தார்.