முகப்பு /செய்தி /இந்தியா / வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: பெண் எம்.பி.க்கு சிறை!

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: பெண் எம்.பி.க்கு சிறை!

எம்.பி.க்கு சிறை

எம்.பி.க்கு சிறை

வழக்கு விசாரணையின்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை சாஹீத் அலி ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து மாலோத் கவிதா மற்றும் அவரது உதவியாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தெலங்கானாவைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்  மாலோத் கவிதா. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மாலோத் கவிதா தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி  கட்சியின் சார்பாக  மஹ்பூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். எனினும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தே அவர் வெற்றி பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, மாலோத் கவிதா மற்றும் அவரது உதவியாளர் மீது புர்கம்பஹாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது பிடிபட்டதால்  மாலோத் கவிதாவின் உதவியாளர் சாஹுத் அலி இவ்வழக்கில் முதல் குற்றவாளியாகவும் மாலோத் கவிதா இரண்டாவது குற்றவாளியாகவும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் படிக்க: இந்தியாவில் குழந்தைகளுக்கு போட ரெடியாகும் தடுப்பூசிகள் என்னென்ன?

இந்த வழக்கை நம்பள்ளியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை சாஹீத் அலி ஒப்புக்கொண்டார்.  வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது உண்மை என தெரியவந்ததையடுத்து, மாலோத் கவிதா மற்றும் அவரது உதவியாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 1991ல் இருந்ததைவிட மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங் வேதனை!

இதையடுத்து, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாலோக் கவிதா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  எம்.பி.

First published:

Tags: Jail, Telangana, TRS