முகப்பு /செய்தி /இந்தியா / ஆசைக்கு இணங்க மறுத்த பெண்.. வீடு புகுந்து பீர் பாட்டிலால் கழுத்தறுத்த எம்.எல்.ஏ. பி.ஏ.

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்.. வீடு புகுந்து பீர் பாட்டிலால் கழுத்தறுத்த எம்.எல்.ஏ. பி.ஏ.

ஜூப்ளி ஹில்சில் இளம் பெண்ணின் கழுத்து அறுத்த எம்எல்ஏவின் உதவியாளர்

ஜூப்ளி ஹில்சில் இளம் பெண்ணின் கழுத்து அறுத்த எம்எல்ஏவின் உதவியாளர்

HYDERABAD : தெலங்கானா ராஷ்டிரிய சமிதி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர், அதிகாலையில் வீடு புகுந்து பெண் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்த பரபரப்பு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hyderabad, India

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதி சட்டமன்ற உறுப்பினர் மாகண்டி கோபிநாத். அவருடைய தனிப்பட்ட உதவியாளர் விஜயஷிம்கா.  சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றபோது நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற 35 வயது பெண் நிஷா என்பவருடன் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் விஜயஷிம்காவுக்கு அறிமுகமாகியுள்ளார்.

நிஷாவுக்கு திருமணமாகி அவருக்கு சூரஜ் என்பவர் கணவராக உள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை குடிபோதையில் நிஷா வீட்டுக்குச்சென்ற விஜயஷிம்கா, அவரை தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

அவருடைய ஆசையை ஏற்க நிஷா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  விஜயஷிம்கா பீர் பாட்டிலை உடைத்து நிஷா கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த நிஷா இது பற்றி தன்னுடைய கணவர் சுராஜ்க்கு போன் மூலம் தகவல் அளித்தார்.

விரைந்துவந்த சுராஜ் மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து,  ஜூபிலி ஹில்ஸ் போலீசில் இது பற்றி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடைபெற்றபோது அவருடைய கணவர் எங்கிருந்தார் என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். குற்றத்தில் ஈடுபட்டது சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் என்பதால் இந்த விவகாரம் அரசியல் விவகாரமாக மாறி உள்ளது.

இதையும் படிங்க: தாய்லாந்தில் ஐடி வேலை வாங்கித்தருவதாக மோசடி..மியான்மரில் சிக்கித் தவிக்கும் 60 இந்தியர்கள்

ஆனால் விஜய் சிம்ஹா, நிஷா ஆகியோருக்கு இடையே ஏற்கனவே ரகசிய தொடர்பு இருந்துள்ளதாகவும், இந்த விஷயம் நிஷாவின் கணவன் சுராஜ்க்கு தெரியும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் மனைவியின் காதலன் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் என்பதால் அவருடைய அரசியல் செல்வாக்கு, ஆள்பலம் ஆகியவற்றிற்கு பயந்து சுராஜ் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

First published:

Tags: Crime News, Hyderabad, Murder case, Telangana