முகப்பு /செய்தி /இந்தியா / தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இன்று பதவியேற்பு!

தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இன்று பதவியேற்பு!

சந்திரசேகர் ராவ்

சந்திரசேகர் ராவ்

டிஆர்எஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டிஆர்எஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரசேகர் ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

  • Last Updated :

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ் இன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார்.

2014-ம் ஆண்டு நாட்டின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானாவில் முதன்முறையாக நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

9 மாதங்களுக்கு முன்பாக ஆட்சியை கலைத்து முன்கூட்டியே தேர்தலுக்கு தயாரான சந்திரசேகர் ராவ் மக்கள் நலத் திட்டங்களால் முன்பை விட அசுர பலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். மொத்தமுள்ள 119 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 60 இடங்கள் போதுமான நிலையில், டிஆர்எஸ் கட்சி 88 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்திசாயத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர் ராவ் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற டிஆர்எஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டிஆர்எஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரசேகர் ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்  விழாவில் சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார்.

Also watch

top videos

    First published:

    Tags: Chandrasekar rao, Telangana