தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் சிக்கல்

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான ஆவணத்தில் பிரிட்டன் உள்துறை செயலாளர் கையொப்பம் இடாததால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் சிக்கல்
தொழிலதிபர் விஜய் மல்லையா.
  • Share this:
இந்தியாவில் வங்கிகளில் வாங்கிய சுமார் 9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் புகுந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல பிரிட்டன் நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால், அவரை 28 நாட்களில் இந்தியா அழைத்து வரும் சூழல் உருவானது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான ஆவணத்தில் பிரிட்டன் உள்துறை செயலாளர் ப்ரீதி படேல் இதுவரை கையொப்பம் இடவில்லை என்று தெரியவந்துள்ளது. படேல் ஒப்புதல் அளித்ததில் இருந்து 28 நாட்கள் கழித்தே விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும், விஜய் மல்லையா பிரிட்டனில் அடைக்கலம் கோரி மனு தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Also see:
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading