வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. ஒவ்வொரு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மூன்று மாநிலங்களும் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 30 இடங்கள் தேவை. இந்நிலையில்,காலை 11.30 மணி நிலவரப்படி நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் NDPP- பாஜக கூட்டணி 35க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
திரிபுராவிலும் ஆளும் பாஜக கூட்டணி 32 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. முதலமைச்சர் கார்னட் சங்மாவின் NPP கட்சி 26 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.எனவே, மூன்று மாநிலங்களில் 2 மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நட்சத்திர வேட்பாளர்களை பொறுத்த வரை மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். மேகாலயாவில் முதலமைச்சர் கான்ரட் சங்கமா தான் பேட்டியிட்ட சவுத் துரா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். அதேபோல், நாகாலாந்தில் முதலமைச்சர் நைபியு ரியோ நார்தர்ன் அங்காமி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திரிபுராவின் போர்டோவாலி டவுன் தொகுதியில் முதலமைச்சர் மானிக் சாஹா கடும் போட்டிக்கு மத்தியில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். பாஜகவின் மானிக் சாஹா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தற்போது 800 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிங்க: Erode East Bypoll 2023 Live Election Results: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்...
அதேபோல் ஆரம்பத்தில் பின்தங்கி இருந்த திரிபுரா துணை முதலமைச்சர் ஜிஷ்னு தேவ்வர்மா சமீபத்திய சுற்றுகளில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற தொடங்கியுள்ளார். அதேவேளை, மாநில பாஜக தலைவர் ராஜிப் பாட்டர்ஜி பனாமாலிபூர் தொகுதியில் பின்தங்கியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election Result, Meghalaya, Nagaland, Tripura