முகப்பு /செய்தி /இந்தியா / Election results 2023: 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. முன்னிலை நிலவரம் வெளியானது

Election results 2023: 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. முன்னிலை நிலவரம் வெளியானது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

3 வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tripura, India

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக தாபல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

தபால் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்ட பின்னர், வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. பதற்றமான வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், திரிபுரா முதலமைச்சர் மானிக் சாஹா அம்மாநிலத்தின் புகழ்பெற்ற மாதாபாரி கோயிலுக்கு இன்று காலை சென்று வழிபட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல்கட்ட முன்னிலை நிலவரப்படி திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேகாலயாவில் முதலமைச்சர் கான்ரட் சங்மாவின் NPP கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு, அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தற்போது தொடங்கியுள்ளது.

First published:

Tags: Election Result, Meghalaya, Nagaland, Tripura