முகப்பு /செய்தி /இந்தியா / திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை.. 3 மாநிலங்களில் மகுடம் யாருக்கு?

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை.. 3 மாநிலங்களில் மகுடம் யாருக்கு?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tripura, India

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.அதேபோல, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர் தரப்பில் இடதுசாரி கூட்டணி களம் கண்டன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என முடிவுகள் கூறப்பட்டன.

அதேபோல, நாகாலாந்தில் ஆளும் என்டிபிபி -பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை அமையக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரங்கள் தொடர்ந்து வெளியாக உள்ள நிலையில், வெற்றி, தோல்வி குறித்த தெளிவு நண்பகல் 12-1 மணி அளவில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

First published:

Tags: Assembly, Election Result, Meghalaya, Nagaland, Tripura