திரிபுராவில் தாய் ஒருவர் தனது இரு மகள்களுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். கற்பதற்கு வயது தடையில்லை. ஆர்வம் கொண்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் கற்கலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் திரிபுராவைச் சேர்ந்த ஷிலா ராணி தாஸ். அம்மாநிலத்தின் அகர்தலா பகுதியைச் சேர்ந்த இவருக்கு ராஜஸ்ரீ, ஜெயஸ்ரீ என இரு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ராஜஸ்ரீக்கு திருமணம் ஆகி ஏழு வயது மகன் உள்ளார்.
இரண்டாவது மகள் ஜெயஸ்ரீ 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கோவிட் லாக்டவுன் நேரத்தில் முதல் மகள் ராஜஸ்ரீ மற்றும் தாயார் ஷிலா ராணிக்கு படிப்பின் மீது ஆர்வம் துளிர்விட்டுள்ளது. இளையவர் ஜெயஸ்ரீ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராவதை பார்த்ததும், அவரது அக்கா ராஜஸ்ரீ தானும் 12ஆம் வகுப்பு தேர்வை எழுதலாம் என முடிவெடுத்து தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகியுள்ளார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே, இருவரின் தாயாரான ஷிலா ராணி தான் 10ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்று அதிரடி முடிவெடுத்து அவரும் தேர்வுக்கு விண்ணப்பித்து தன்னை தயார் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தாய், அவரது இரு மகள்கள் ஆகிய மூவரும் பொதுத் தேர்வு எழுதிய நிலையில், மூவரும் அதில் வெற்றிகரமாக தேர்ச்சியும் பெற்றுள்ளனர். தாய் ஷிலா ராணியின் கணவர் ஒரு தினசரி கூலி தொழிலாளர் ஆவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் கணவர் மறைந்த நிலையில், இளைய மகளை தாய் தான் அரவணைத்து வளர்த்து வருகிறார்.
இதையும் படிங்க: வேலை செய்யாமல் சம்பளம் வாங்க மனம் உறுத்துகிறது - ரூ.24 லட்சத்தை திரும்பி தந்த பேராசிரியர்
இளமை காலத்தில் சூழல் காரணமாக தொடர முடியாத கல்வியை தற்போது உத்வேகத்துடன் தொடர்ந்து சாதித்து காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் படிக்கத் தொடங்கிய தாயார் ஷிலா அதை சாதித்தும் காட்டியுள்ளார். தனது வெற்றிக்கு தனது இரு மகள்களும் தான் முக்கிய உறுதுணையாக இருந்ததாக பெருமையுடன் கூறும் ஷிலா ராணி, அவர்கள் அளித்த நம்பிக்கையின் காரணமாகவே தான் தேர்ச்சி பெற்றேன் என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Mother, Public exams