திரிபுராவைச் சேர்ந்த
பாஜக எம்.எல்.ஏ.வான ஆஷிஷ் தாஸ் , அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அவர், தவறுக்கான பிராயசித்தம் இச்செயல் என்றும் கூறியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தின் சூர்மா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த ஆஷிஷ் தாஸ். பாஜக மீது அதிருப்தியில் உள்ள ஆஷிஷ் தாஸ், திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்களை வைத்து வந்தார். ஒரு வாரத்துக்கு முன்பு அவர் மேற்கு வங்கத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோயிலுக்கு சென்ற ஆஷிஷ் தாஸ் தனது தலைக்கு மொட்டையடித்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜவில் இருந்து விலகுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.மேலும் பல எம்.எல்.ஏ.க்களும் வருங்காலத்தில் பாஜகவில் இருந்து விலகுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
பாஜகவில் இணைவது குற்றம் என்றும் தனது தவறுக்கு பிராயசத்தமாக தலையை மொட்டையடித்துகொண்டதாக கூறிய அவர், 2023ம் ஆண்டு பாஜக அரசு அகற்றப்படும்வரை மொட்டை தலையுடனே இருக்கப் போவதாக ஆஷிஷ் தாஸ் குறிப்பிட்டார். அவர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு - பிரதமர் மோடி
மேற்குவங்க சட்டப்பேரவை இடைத்தேர்தல்தேர்தல் வெற்றிக்கு பின்னர் அம்மாநிலத்தை சேர்ந்த பாஜகவினர் கட்சியில் இருந்து விலகி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது வாடிக்கையாகியுள்ளது. தற்போது இடைத்தேர்தலில் மம்தா பெற்றுள்ள மாபெரும் வெற்றி, 2024ம் ஆண்டுக்கான பிரதமர் தேர்தலில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உ.பி. விவகாரம்...அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் தான் காரை ஓட்டிவந்தார்.. காயமடைந்த விவசாயி குற்றச்சாட்டு!
இதேபோல், மேற்கு வங்கத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வலுபடுத்தும் முயற்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.