திரிபுராவில் பிரதமர் இருந்த மேடையில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சர்!

எனினும், வீடியோ தொடர்பாக அமைச்சர்கள் மனோஜ் காந்தி தேப் மற்றும் சந்தனா சக்மா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

news18
Updated: February 12, 2019, 10:26 AM IST
திரிபுராவில் பிரதமர் இருந்த மேடையில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சர்!
சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள்
news18
Updated: February 12, 2019, 10:26 AM IST
திரிபுரா மாநிலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி மேடையில் சக பெண் அமைச்சரின் இடுப்பில் அம்மாநில அமைச்சர் கை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். விழாவில் மாநில முதல்வர் பிப்லப் தேப் மற்றும் அமைச்சர்கள் இருந்தனர்.

விழாவின் போது, அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் சந்தனா சக்மாவின் இடுப்பில் சக அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் கை வைத்து தள்ளும் காட்சி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோவில், மனோஜ் பின்னால் நகரும் போது சந்தனாவின் இடுப்பில் கை வைத்து நகர வைக்கிறார். உடனே, சந்தனா மனோஜ்ஜின் கையை தட்டி விடுகிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சியான சிபிஎம், பிரதமர் இருந்த மேடையிலேயே பெண் அமைச்சர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மனோஜ் காந்தி தேப் பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், வீடியோ தொடர்பாக அமைச்சர்கள் மனோஜ் காந்தி தேப் மற்றும் சந்தனா சக்மா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

சிபிஎம்-ன் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அம்மாநில பாஜக, “அமைச்சர் தவறான நோக்கத்தில் தொட்டதாக பெண் அமைச்சர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இடதுசாரிகளின் மலிவான அரசியலையே இது காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளது.
Loading...
Also See...

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...