திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் மார்ச் மாதத்தில் நிறைவடைகிறது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள், தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற, 3 ஆயிரத்து 337 வாக்குச் சாவடிகள் திரிபுராவில் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் விவிபேட் ஆகியவை கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் தற்போது மாணிக் சாஹா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 46 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் சுயேச்சைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election