Home /News /national /

தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாக திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா

தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாக திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா

திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் ராஜினாமா

திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் ராஜினாமா

சில மாநிலங்களில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முதலமைச்சர்களை மாற்றுவதை பாஜக மேலிடம் வழக்கமாக கொண்டுள்ளது.

    திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்துள்ளார். அங்குள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் எஸ்என் ஆர்யாவிடம் தனது ராஜினாமாவை பிப்லப் குமார் சமர்ப்பித்தார்.

    இந்நிலையில், புதிய முதலமைச்சரை பாஜக மேலிடம் விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், கட்சியின் பொதுச் செயலாளர் விநோத் தாவ்டே ஆகியோர் புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் மத்திய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் தற்போது திரிபுரா தலைநகர் அகர்தலாவுக்கு விரைந்துள்ளனர். துணை முதலமைச்சராக இருக்கும் ஜிஷ்னு தேவ் வர்மா அல்லது மாநிலங்களவை உறுப்பினர் மானிக் சாஹா ஆகிய இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

    2018ஆம் ஆண்டு திரிபுராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கால் நூற்றாண்டு கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்த்தப்பட்டு முதல் முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 36 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. இதையடுத்து மாநிலத்தின் 10ஆவது முதலமைச்சராக பிப்லப் குமார் தேவ் தேர்வு செய்யப்பட்டார்.

    இதையும் படிங்க: ஒரு நாடு ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துங்கள் - அமித் ஷாவுக்கு சஞ்சய் ராவத் சவால்

    தற்போது, கட்சியின் மாநில அமைப்பில் நிலவும் குழப்பம் காரணமாகவும், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டும் பிப்லப் குமார் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. சமீப காலமாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முதலமைச்சர்களை மாற்றுவதை பாஜக மேலிடம் வழக்கமாக கொண்டுள்ளது. குஜராத் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய முதலமைச்சர்களை இவ்வாறு பாஜக மேலிடம் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி