திரிபுரா பாஜக அரசு கவிழ்கிறது? 9 எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவல்?

பா.ஜ.க

திரிபுராவில் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், பா.ஜ.க தேசியத் தலைவர்கள் திரிபுராவுக்குச் சென்றுள்ளனர்.

 • Share this:
  திரிபுராவில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 9 பேர் முகுல்ராயுடன் பேச்சுவார்தை நடத்திவருகிறார்கள். அதனால், ஆட்சி கலையும் சூழல் உள்ளது என்று செய்திகள் வெளிவருகின்றன.

  திரிபுராவில் 1993-ம் ஆண்டு தசரத் டெப் தலைமையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து 4 ஆண்டுகள் அவர் ஆட்சியில் இருந்தார். அதன்பிறகு, மாணிக் சர்கார் தலைமையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. திரிபுராவில் வலிமையாக இருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி 20180ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. 2013-ம் ஆண்டில் ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இல்லாத நிலையில், காங்கிரஸிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்களை வளைத்து 2018-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது.

  காங்கிரஸிலிருந்து பா.ஜ.கவுக்கு தாவிய 40-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுத்தது. அந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 36 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னதாக, 2018-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர் முகுல் ராய் பா.ஜ.கவில் இணைந்திருந்தார். அவருடைய இணைவைத் தொடர்ந்து திரிபுராவிலும் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர் பா.ஜ.கவில் இணைந்தனர். தற்போது, முகுல்ராய் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

  இந்தநிலையில், திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க இணைந்தவர்கள் மீண்டும் திரிணாமுலுக்கே திரும்புவதாக செய்திகள் வெளியாகின்றன. திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவ்வுக்கு எதிராக 9 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் முகுல் ராய் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த பரபரப்பான சூழலைத் தொடர்ந்து, பா.ஜ.க பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான அமைப்புச் செயலாளர் அஜய் ஜம்வால் திரிபுராவுக்குச் சென்றுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க தலைவர்கள் தெரிவிக்கும்போது, எல்லாம் நல்லபடியாக உள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க முடியாது’என்று தெரிவித்துள்ளனர்.
  Published by:Karthick S
  First published: