முகப்பு /செய்தி /இந்தியா / “தனி மாநில முழக்கம்...” முதல் தேர்தலிலேயே மாஸ் என்ட்ரி... யார் இந்த பிரத்யோத் கிஷோர்?

“தனி மாநில முழக்கம்...” முதல் தேர்தலிலேயே மாஸ் என்ட்ரி... யார் இந்த பிரத்யோத் கிஷோர்?

கட்சி பொதுக்கூட்டத்தில்பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேபர்மா

கட்சி பொதுக்கூட்டத்தில்பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேபர்மா

திரிபுரா மாநிலத்தில் புது கட்சியான திப்ரா மோதா 10 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் தேர்தலிலேயே சிறப்பான தொடக்கத்தை கண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tripura, India

60 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் பாஜக ஆரம்பத்தில் 30க்கும் குறைவான இடங்களிலேயே முன்னிலை பெற்றிருந்தது. பின்னர், பெரும்பான்மை எண்ணிக்கை கடந்து முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் உடனுக்குடன் 

நண்பகல் 12.30 நிலவரப்படி, பாஜக கூட்டணி 33 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேவேளை திரிபுரா தேர்தலில் புதிகாக களமிறங்கிய திப்ரா மோதா என்ற மாநில கட்சி தனது முதல் தேர்தலிலேயே 10 இடங்களில் முன்னிலை பெற்று பலரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளது.

இந்த கட்சியை ஆரம்பித்து தலைமை பொறுப்பில் இருக்கும் பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேப் பர்மா திரிபுராவை ஆண்ட மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது குடும்பம் காங்கிரஸ் கட்சி பாரம்பரியத்தை சார்ந்தது. இவரது தந்தை 3 முறை காங்கிரஸ் கட்சியின் எம்பியாகவும் தாய் 2 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் இருந்தவர்கள். பிரத்யோத் கிஷோரும் இளம் வயதில் இருந்து காங்கிரஸ் கட்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், கட்சி மேலிடத்துடன் முரண்பட்டு 2019ஆம் விலகினார்.

பின்னர் 2021ஆம் ஆண்டு திப்ரா மோதா என்ற தனி கட்சியை தொடங்கிய இவர், பழங்குடி மக்கள் உரிமையை மையமாகக் கொண்டு திப்ராலாந்து என்ற தனி மாநில முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டார். அம்மாநில பழங்குடி மக்களுக்கான தலைவனாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட பிரத்யோத் கிஷோருக்கு உள்ளாட்சி தேர்தல்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்து. தற்போது மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் திரிபா மோத்தா கட்சி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Election, Election Result, Tripura