முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது!

முத்தலாக் மசோதா முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவானது இல்லை. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரானது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும்

Web Desk | news18
Updated: July 30, 2019, 7:18 PM IST
முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது!
Breaking News
Web Desk | news18
Updated: July 30, 2019, 7:18 PM IST
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

மக்களவையில் கடந்த 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் முத்தலாக் தடை மசோதாவை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். அந்த மசோதாவின் மீது மாநிலங்களவை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

தலாக் முறை Representative image



அவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் திருச்சி சிவா, ‘முத்தலாக் மசோதா முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவானது இல்லை. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரானது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும்’ என்று பேசினார்.

அதேபோல, முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அ.தி.மு.க உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன், ‘முத்தலாக் மசோதாவில் உள்ள சில பிரிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்’ என்று தெரிவித்தார்.

விவாதங்களுக்குப் பிறகு, மாலையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு முத்தலாக் மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தினார். குரல் வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 84 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அ.தி.மு.க உறுப்பினர்கள் 11 பேரும், ஜனதா தள உறுப்பினர்கள் 6 பேரும் வெளிநடப்பு செய்தனர்.

Loading...

அதேபோல, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிகளும் வெளிநடப்பு செய்தனர். அதன்மூலம், முத்தலாக் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரண்டு அவையிலும், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றப் பின் சட்டமாகும்.

Also see:

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...