சாரதா குழுமம் கொடுத்த ரூ.2.67 கோடியை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்த திரிணாமுல் கட்சியின் குணால் கோஷ்

சாரதா குழுமம் கொடுத்த ரூ.2.67 கோடியை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்த திரிணாமுல் கட்சியின் குணால் கோஷ்

குணால் கோஷ். திரிணாமுல் தலைவர், சாராதா குழும மோசடி

தன்னுடைய வங்கிக் கணக்கு, எல்.ஐ.சி பணம் ஆகியவற்றிலிருந்து எடுத்தும் தனக்குத் தெரிந்தவர்களிடமும் பெற்று இந்தத் தொகையை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பொன்ஸி நிறுவனம் என்ற ஊடக நிறுவனத்தில் தான் பணியாற்றிய போது சாரதா குழுமம் தனக்குக் கொடுத்த ரூ2.67 கோடியை அமலாக்கத்துறையிடம் கொடுத்து விட்டதாக கூறுகிறார் திரிணாமுல் கட்சியின் குணால் கோஷ்.

  மேற்கு வங்கத்தையும், திரிணாமுல் கட்சி மம்தா தலைமை ஆட்சிக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திய சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து அமலக்காக் இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

  இந்நிலையில் சாரதா குழுமத்திடமிருந்து தான் பெற்ற ரூ.2.67 கோடியை அமலாக்கத்துறையிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் குணால் கோஷ் மீது அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது, அப்போது சம்பளம் மற்றும் விளம்பரத்துக்காகக் கொடுத்த ரூ.2.67 கோடியை தான் அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைத்து விடுவதாக கூறியுள்ளார், இவரது இந்த கோரிக்கையை அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. இதனடிப்படையில் ரூ.2.67 கோடியை குணால் கோஷ் ஒப்படைத்துள்ளார்.

  தன்னுடைய வங்கிக் கணக்கு, எல்.ஐ.சி பணம் ஆகியவற்றிலிருந்து எடுத்தும் தனக்குத் தெரிந்தவர்களிடமும் பெற்று இந்தத் தொகையை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

  அதிக வட்டி ஆசைக்காட்டி ஆயிரக்கணக்கானோரை சாரதா குழுமம் மோசடி செய்தது அம்பலமாகி மேற்கு வங்கத்தையே உலுக்கியது. அளவுக்கதிக வட்டிக்கு ஆசை காட்டினால் பணம் குவியும் என்று கணக்கிட்டு இந்தத் தில்லுமுல்லுவில் நிறுவனம் இறங்கியது.

  இதன் பின்னணியில் திரிணாமுல் கட்சியின் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியது.

  இந்நிலையில்தான் குணால் கோஷ் நடத்திய டிவி சேனலுக்கு சாரதா குழுமம் நிதியளித்துவந்தது. கோஷ் 34 மாதங்கள் சிறையில் இருந்தார். அக்டோபர் 5, 2016-ல் இவருக்கு ஜாமீன் கிடைத்தது.

  2013-ல் திரிணாமுல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட குணால் கோஷ், பிறகு கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் அமலாக்கத்துறையிடம் தான் சாரதா குழுமத்திடமிருந்து பெற்ற தொகையை செலுத்தியுள்ளார் குணால் கோஷ்.

  மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல்கள் வருவதையடுத்து பிரச்சாரங்கள் தீப்பொறிப்பறக்க நடந்து வருகிறது. திரிணாமுல் கட்சிக்கு எதிராக சாரதா சிட்பண்ட் மோசடியை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் பேசி வருகின்றன.

  இந்நிலையில் குணால் கோஷின் இந்தச் செயல் முக்கியத்துவம் பெறுகிறது.
  Published by:Muthukumar
  First published: