'எலும்பை உடைத்துவிடுவேன்': கட்சியினர் முன் சக எம்.எல்.ஏவை மிரட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ!

மம்தா பானர்ஜி

என்னுடைய வழியில் குறுக்கிட்டால் உன் எலும்புகளை உடைத்துவிடுவேன் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே எம்.எல்.ஏ பேசினார்.

  • Share this:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இருவருக்கு இடையிலான வார்த்தை மோதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதால் மேற்குவங்கத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எலும்பை உடைத்துவிடுவேன் என சக எம்.எல்.ஏ ஒருவரை மற்றொரு எம்.எல்.ஏ மிரட்டும் வீடியோ காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அக்கட்சியின் தலைமை.

முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பரத்புர் தொகுதி எம்.எல்.ஏவான ஹுமாயுன் கபிர், நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மூத்த தலைவர். இவர் முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஹுமாயுன் கபிருக்கும் ரெஜிநகர் எம்.எல்.ஏவான ரபியுல் ஆலம் சவுத்ரிக்கும் இடையே ஏற்கனவே பகைமை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read:  பாஜக எம்.எல்.ஏவை தெருவில் தேங்கியிருக்கும் கழிவு நீரில் நடக்க வைத்த தொகுதி மக்கள்!

இந்த நிலையில் கட்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹுமாயுன் கபிர், தனது ஆதரவாளர்களிடையே பேசுகையில், ரபியுல் ஆலம் சவுத்ரியை சுட்டிக்காட்டி சில கருத்துக்களை கூறியுள்ளார். அப்போது, ஆலம் சவுத்ரி மிகவும் அடாவடியாக மாறிவிட்டார். என்னுடைய வழியில் குறுக்கிட்டால் உனக்கு (ரபியுல் ஆலம் சவுத்ரி) தக்க பாடம் புகட்டுவேன். உன் எலும்புகளை உடைத்துவிடுவேன்” என பேசினார். அவரின் பேச்சை கேட்ட கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

humayun kabir MLA


தொடர்ந்து பேசிய அவர், ஆலம் சவுத்ரியின் பெயரை குறிப்பிட்டு, நீயும், நானும் ஒரே கட்சியில் தான் இருக்கிறோம். நீங்கள் தண்ணீரில் வாழ்ந்தால் முதலையுடன் சண்டையிடத் துணியாதீர்கள் என ஹுமாயுன் கபிர் பேசினார்.

Also Read:   பலே கில்லாடி.. மனைவிக்கு தெரியாமல் பெற்றோர் உதவியுடன் இரண்டு திருமணம் செய்த நபர்!

ஹுமாயுன் கபிரின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆலம் சவுத்ரி, இந்த விவகாரம் குறித்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இனி அவர்களின் முடிவு தான். நான் மம்தாவின் சேனை, கட்சி என்ன முடிவெடுத்தாலும் அதன்படி செயல்படுவேன் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கூறுகையில், இது போன்ற பேச்சுக்களை நாங்கள் ஆதரிப்பதில்லை. கபிருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், இது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
Published by:Arun
First published: