மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.கவை வீழ்த்திய திரிணாமுல் காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.கவை வீழ்த்திய திரிணாமுல் காங்கிரஸ்!
திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
  • News18
  • Last Updated: November 28, 2019, 6:01 PM IST
  • Share this:
பா.ஜ.க.வை மக்கள் நிராகரித்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் காளியாகஞ்ச், கரக்பூர் மற்றும் கரீம்புர் தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. .

இதில், காளியாகஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபான் தேவ் சின்ஹா பா.ஜ.க வேட்பாளர் கமல் சந்திராவை விட 2,418 வாக்குகள் அதிகம் பெற்றார். கரக்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பிரதிப் சர்க்கார் பா.ஜ.க வேட்பாளர் பிரேம் சந்த்ஜாவை விட 20788 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.


கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் பிமலேந்து சின்ஹா ராய், பா.ஜ.க வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜும்தாரைவிட 23,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

இடைத்தேர்தல் நடைபெற்ற 3 சட்டசபைத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து பேசிய மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ’இது மக்களின் வெற்றி. இது வளர்ச்சியின் வெற்றி. திமிர்பிடித்த அரசியல் வரும் காலங்களில் வேலை செய்யாது. மக்கள் பா.ஜ.கவை நிராகரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Also see:

 
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்