மேற்குவங்கத்தில் மேலும் ஒரு வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு

காஜல் சின்ஹா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் காஜல் சின்ஹா உயிரிழந்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா இரண்டாது அலை சுனாமி போல மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. முதல் அலையில் காணத பாதிப்புகளை இந்தியா தற்போது எதிர்கொண்டுவருகிறது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றன. கடந்தமுறை பாதிக்கப்படாத பலரும் இந்தமுறை பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னமும் நிறைவடையாதநிலையில், இன்னமும் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் கூட்டம் கூடிவருகிறது. அதனால், கொரோனா பரவல் வேகமும் அதிகரித்துவருகிறது.

  மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பால் எம்.எல்.ஏ வேட்பாளர்களும் உயிரிழப்பதும் பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கார்தா தொகுதி வேட்பாளர் காஜல் சின்ஹா இன்று உயிரிழந்தார். இதுவரையில் மேற்குவங்கத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர். 6-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  மஇதற்கிடையில், கடந்த வியாழக்கிழமையன்று, சாலைப் பேரணி, நடைப் பயணத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. மேற்குவங்கத்தில் நாளை 7-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வேட்பாளர் உயிரிழப்பு தொடர்பாக மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கொரோனா பாதிப்பால் கார்தா தொகுதி வேட்பாளர் காஜல் சின்ஹா உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கு சேவை செய்வதற்காக அவருடைய வாழ்க்கையை அர்பணித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்தார். நாம் அவரை இழந்துவிட்டோம். அவருடைய குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: