திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்: மம்தா பானர்ஜிக்கு மேலும் பின்னடைவு?

கடந்த வாரம் நாடியாவில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி கலந்து கொண்டபோது அவருடன் ஒரே மேடையில் இருந்தவர் எம்.எல்.ஏ அரிந்தம் பட்டாச்சார்யா.

கடந்த வாரம் நாடியாவில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி கலந்து கொண்டபோது அவருடன் ஒரே மேடையில் இருந்தவர் எம்.எல்.ஏ அரிந்தம் பட்டாச்சார்யா.

  • Share this:
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பரபரப்பான காட்சிகள் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான அரிந்தம் பட்டாச்சார்யா, அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார்.

நாடியா மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் தொகுதியைச் சேர்ந்த அரிந்தம் பட்டாச்சார்யா. இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், பாஜக பொதுச்செயலாளரும், மேற்குவங்க பாஜக பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த வாரம் நாடியாவில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி கலந்து கொண்டபோது அவருடன் ஒரே மேடையில் இருந்தவர் அரிந்தம் பட்டாச்சார்யா.

2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பட்டாச்சார்யா, பின்னர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தது குறித்து அரிந்தம் பட்டாச்சார்யா கூறுகையில், காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் ஆனால் தொகுதி மேம்பாட்டிற்காக திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் நினைத்தது போல வளர்ச்சி எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தார்.

கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெருத்த பின்னடைவை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கட்சி தொடங்கிய பின்னர் முதல் முறையாக சோதனையான காலகட்டத்தை சந்திக்த்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அக்கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கடந்த சில மாதங்களில் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளது அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக திகழ்ந்த அமைச்சர் சுவேந்து அதிகாரி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்  'கட்சி அனுமதித்தால் சுவேந்து அதிகாரியின் தொகுதியில் போட்டியிடுவேன்' என மம்தா கூறியதும், அதற்கு ' மம்தா எனது தொகுதியில் போட்டியிட்டால் அவரை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன்' என சுவேந்து அதிகாரி பதிலடி அளித்ததும் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: