நீடா முகேஷ் அம்பானி கலசார மையமானது, இந்தியாவின் கலாசார புகழை உலகெங்கும் பறைசாற்றும் என்று ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவர் நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.
மும்பையின் பாந்த்ரா – குர்லா வளாகத்தில் ஜியோ உலக மையம் செயல்பட்டு வருகிறது. இதில் NMACC எனப்படும் நீடா முகேஷ் அம்பானி கலாசார மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் கலை மற்றும் கலாசாரத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்த மையம் செயல்படவிருக்கிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த கலாசாரா மையம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. தற்போது அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலேயே சிறப்பு வாய்ந்த பகுதியாக உருவாக்கப்பட்டு வரும் இந்த மையம், இந்தியாவின் நெடுங்கால கலாசார புகழுக்கு சமர்ப்பணம் என்று நீடா அம்பானி கூறியுள்ளார்.
கலாசார மையம் குறித்து நீடா அம்பானியின் மகள் இஷா அம்பானி கூறுகையில், ‘எனது தாயார் ஒரு கல்வியாளர், நன்கொடையாளர் மற்றும் பெண் தொழிலதிபராக உள்ளார். ஆனால், நடன கலைஞர் என்ற அவரது அடையாளத்தில் எனது தாயார் உறுதியாக இருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நடனமாடி வருகிறார்.
கலை மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தை அளவிட முடியாது. இந்தியாவின் கலாசாரத்திற்கும், கலை புகழுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று அவர் நீண்ட காலமாக விரும்பி வந்தார். இதற்காக நான், எனது தாயார் மற்றும் எனது குழுவினர் பணியாற்றி வந்தோம்.
அந்த வகையில் இந்த உயர்ந்த நோக்கத்திற்காக அவருடன் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
நீடா அம்பானி கூறுகையில், ‘நான் உங்கள் முன்னாள் ஒரு நடனக் கலைஞராக பேசுகிறேன். நான் 6 வயதில் பரதநாட்டியம் ஆடக் கற்றேன். இது எனக்கு தன்னம்பிக்கையையும், உடல் ஆரோக்கியத்தையும் அளித்தது.
என்னைப் பொருத்தளவில் நடனம் என்பது தியானத்தை போன்றது. ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக உலகின் பல்வேறு சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய கனவு திட்டங்களில் ஒன்றான நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இந்த மையமானது இந்தியாவின் கலாசார புகழுக்கு சமர்ப்பணமாக அமைக்கப்படுகிறது. இந்த மையம் பல்வேறு திறமையாளர்களை உருவாக்கும் என நம்புகிறேன். இந்த மையத்திற்கு உங்கள் அனைவரையும் அழைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி’ என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nita Ambani