பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, கொடூர செயலில் ஈடுபட்ட 25 வயது இளைஞரை போலீசார் ஒரே நாளில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட துணை காவல் ஆணையர் கூறுகையில், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் இருந்து வாழ்வாதாரம் தேடி சவுதாகுவா பகுதிக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு துப்ரான்பேட்டையில் கணவன் சேமிப்பு கிடங்கில் இரவு நேரத்திலும், பகலில் பொறியியல் கல்லூரியிலும் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் சேமிப்பு கிடங்கு அருகில் குடிசை ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.
அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்த 25 வயது இளைஞர் ஒருவர், பழங்குடியினப் பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். தடுக்க முயன்ற அப்பெண்ணை அருகிலிருந்த புதருக்குள் இழுத்துச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
தொடர்ந்து, அந்த பெண் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற போது, அருகில் கிடந்த கட்டையை கொண்டு அந்த வாலிபர் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பழங்குடியின பெண் அங்கேயே மயக்கமடைந்துள்ளார்.
அதோடு, அடங்காத அந்த காமுகன், அப்பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமைக்க ஆளாக்கி, அவரிடம் தங்க தாலி சங்கிலி மற்றும் வெள்ளி கொலுசை திருடிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதனிடையே, இரவு 8 மணிக்கு வேலை முடித்து வீடு திரும்பிய கணவன், மனைவியை காணாவில்லை என தேட ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து, இரவு 10 மணி அளவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை கண்டு பிடித்துள்ளார். அவரிடம் இருந்து தாலி செயின் மற்றும் கொலுசு திருடப்பட்டுள்ளதை அவர் கவனித்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக சவுதப்பல் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அந்த பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட கணவர் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி துடித்தார்.
தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தடையங்களைக் கொண்டு மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியை கண்டு பிடித்ததாக துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rape, Sexual harassment