மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

மாதிரிப்படம்

பழங்குடியின பெண்னை துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து போலீஸாரே கிராமத்துக்கு சென்று விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

 • Share this:
  மேற்குவங்கத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணை கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி நிர்வானப்படுத்தி ஊரை சுற்றிவர செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ விவகாரம் காவல்துறையினரின் கவனத்துக்கு வரவும் இதுதொடர்பாக விசாரணையில் இறங்கினர். இந்த சம்பவமானது அலிப்பூர்துவார் மாவட்டம் பாசிம் செங்மார் கிராமத்தில் நடந்தது தெரியவந்தது.

  காவல்துறையின் விசாரணையில், பழங்குடியின பெண்ணுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த நபருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 35 வயதான அந்தப்பெண்ணுக்கு வேறோரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவரை பிரிந்து அந்த நபருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்றுவிட்டார்.

  Also Read: ஏடிஎம் கார்டு வந்திருக்கு ஓடிபி சொல்லுங்க.. அரைமணிநேரத்தில் மாயமான 10 லட்சம் - மூத்த குடிமக்களிடம் நூதன மோசடி

  இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் வாழ முடிவு செய்து கிராமத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தான் அந்த ஊரை சேர்ந்த சில நபர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து வெளியில் இழுத்து வந்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் அந்தப்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊரை சுற்றி வரச் செய்துள்ளனர். அந்த வீடியோவில் ‘என்னை எத்தனை அடி வேண்டுமானலும் அடியுங்கள்’ எனக் கெஞ்சுகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த பெண் கிராமத்தைவிட்டு வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஒருவரும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து போலீஸாரே கிராமத்துக்கு தேடிச்சென்றுள்ளனர். அவரது கணவரின் உதவியுடன் அசாமில் தன் தாய் வீட்டில் இருந்த பெண்ணை போலீஸார் மீண்டும் அந்த கிராமத்துக்கு அழைத்து வந்தனர்.

  இதன்பின்னர் அந்தப் பெண்ணிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக புகார் பெற்று கிராம மக்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் அதேகிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என 6 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதில் பழங்குடியின இளைஞர்களும் அடங்குவர். 12 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: