Home /News /national /

வரமாக கிடைத்த பெண் குழந்தை.. பிறந்த மகளை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்து ராஜமரியாதை அளித்த தந்தை..

வரமாக கிடைத்த பெண் குழந்தை.. பிறந்த மகளை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்து ராஜமரியாதை அளித்த தந்தை..

Helicopter - Couple welcomed Baby

Helicopter - Couple welcomed Baby

Trending | செல்ல மகள் முதல்முதலாக தனது வீட்டிற்கு வரும் நிகழ்வை தடபுடலாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்த குழந்தையை ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஹெலிக்காப்டர் மூலம் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார் விஷால்.

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து ஹெலிக்காப்டர் மூலம் வீட்டிற்கு அழைத்துவந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகே உள்ள கேத் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் சரேகர். 30 வயதான விஷால் சரேக்கர் வழக்கறிஞராக உள்ளார்.

    இவருக்கு கடந்த ஜனவரி 22ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. விஷாலின் குடும்பத்தில் தற்போது பெண் குழந்தைகள் ஏதும் இல்லையாம். எனவே, தனக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் தந்தை விஷால் உள்ளார். அந்த குழந்தைக்கு ராஜலக்ஷ்மி என பெயரிட்டுள்ளனர்.

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, தனது மாமனார் வீடான போசாரியில் இருந்த தாயையும் சேயையும் விஷால் தனது சொந்த வீட்டிற்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அழைத்துவர முடிவெடுத்துள்ளார்.

    தனது ஆசை -  செல்ல மகள் முதல்முதலாக தனது வீட்டிற்கு வரும் நிகழ்வை தடபுடலாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்த குழந்தையை ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஹெலிக்காப்டர் மூலம் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார் விஷால்.



    இதற்காக தனது வீட்டின் அருகே உள்ள காலி நிலத்தில் ஹெலிபேட் ஒன்றையும் உருவாக்கியுள்ளார் விஷால். இது தொடர்பாக விஷால் கூறுகையில், "குடும்பத்தில் நீண்ட நாள் கழிந்து பெண் குழந்தை பிறந்துள்ளது அனைவருக்கும் பெரும் சந்தோஷத்தை தந்துள்ளது. இதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றுதான் ராஜலக்ஷ்மியை ஹெலிக்காப்டர் மூலம் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளோம்.

    வழியில் ஜேஜுரி கோயிலில் வழிபடலாம் என நினைத்தோம். ஆனால் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே, வானத்திலிருந்தே கடவுளை வேண்டிக்கொண்டோம்" என்றார்.

    பொதுவாக பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு பாரம் என்ற மனப்பான்மை நமது சமூகத்தில் நிலவிவரும் நிலையில், தந்தை ஒருவர் பெண் குழந்தை பிறந்ததை இப்படி தடபுடலாக கொண்டாடி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Father, Relationship, Trending

    அடுத்த செய்தி