உயரமான கட்டிடத்தில் நின்று கொண்டு, குதிக்கப் போகிறேன் என்று ஒரு ஆணோ பெண்ணோ சொல்லும் காட்சிகள் அல்லது தவறுதலாக கட்டிடத்தில் மாட்டிக் கொண்ட நபர்கள் உயரமான இடத்திலிருந்து குதிக்கும் காட்சிகளை வெப் சீரிஸ்களில், திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். அதைத் தொடர்ந்து, போலீசார், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் என்று அந்த நபரைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
ஒரு சிலர், ஸ்பீக்கரில் இருந்து பேசிக்கொண்டே சமாதானம் செய்ய முயற்சிப்பார்கள். சாதுர்யமான போலீஸ், கட்டிடத்தின் மீது ஏறி, இறுதி நேரத்தில் அந்த நபரை பிடிக்கும் காட்சிகள் கொஞ்சம் த்ரில்லிங்காக இருக்கும். ஆனால், இதே போல நிஜ வாழ்வில் நடந்தால் எப்படி இருக்கும்?
யாரோ ஒருவர் தவறி விழும் காட்சிகள், விபத்து வீடியோக்கள் அல்லது அதைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போது, படபடப்பாக இருக்கும். இந்நிலையில், இளம் பெண் ஒருவர், டெல்லியில் உள்ள அக்ஷார்தம் மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டிடச் சுவர் மீது ஏறி, குதித்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையைச் சார்ந்த ஜவான் ஒருவர், இன்று காலை அந்தப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
also read : 5 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை வளர்த்தவருடன் இணைந்த நாய்- எமோஷ்னல் வீடியோ!
வெளியான செய்திகளின் படி, இளம் பெண் ஒருவர், காலை நேரத்தில், அக்ஷார்தம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பக்கவாட்டு சுவர் மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சுவரின் முனையில் நிற்கும் இளம்பெண்ணை பார்த்தா CISF ஜவான் ஒருவர், தன்னுடைய ஷிஃப்ட் அதிகாரிக்கு உடனடியாக தகவல் அனுப்பினார்.
உடனடியாக, பணியில் இருந்த CISF ஜவான்களும், DMRC ஊழியர்களும் அந்த இடத்துக்கு விரைந்தனர். அனைவரும் சேர்ந்து அந்தப் பெண்ணிடம் பேசி, தவறான முடிவு எடுக்க வேண்டாம், இறங்கி வருமாறு கோரினார்கள். ஆனால், அந்தப் பெண் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. சுவரின் முனையில் இருந்து இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக நின்று கொண்டிருந்தார்.
also read : மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள் - அடுத்து தான் செம ட்விஸ்ட்..!
ஒருவேளை அப்பெண் விழுந்து விட்டால், எப்படியாவது அவரை காப்பாற்றி விட வேண்டும் என்று, ஜவான்கள் அருகில் இருக்கும் மாலில் இருந்து பெரிய போர்வையை வாங்கி வந்தனர். பாதுகாப்புப் படையின் ஜவான் எவ்வளவோ பேசியும், அப்பெண் குதித்து விட்டார். அப்பெண் குதிக்கும் காட்சி பதைக்க வைக்கிறது. ஆனால், அவர் குதிக்கும் போது, ஜவான்களும் அவரை பத்திரமாக போர்வையில் விழும்படி பிடித்துக் கொண்டனர். 28 நொடிகள் மட்டுமே இருக்கும் வீடியோ என்றாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என்றால், அங்கேயே உயிரிழந்திருப்பார்.
அப்பெண்ணுக்கு வலது காலில் லேசாக அடி பட்டுள்ளது என்றும், அருகில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டார் என்றும் செய்திகள் வெளியானது.
CISF இன் அதிகாரபூர்வமான டிவிட்டர் கணக்கில், உடனடியாக கவனித்து, தகவல் தெரிவித்து அதிரடியாக இப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியது பற்றி பகிரப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழலில், உடனடியாக சரியான முடிவெடுத்த ஜவானை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.