ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹரியானா, டெல்லியில் நில அதிர்வு.. புத்தாண்டு நள்ளிரவில் உணரப்பட்ட நிலநடுக்கம்!

ஹரியானா, டெல்லியில் நில அதிர்வு.. புத்தாண்டு நள்ளிரவில் உணரப்பட்ட நிலநடுக்கம்!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

நிலநடுக்க மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி , நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை 28.71 மற்றும் தீர்க்கரேகை: 76.62, என்று குறிப்பிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Haryana, India

புத்தாண்டின் முதல் நாளான இன்று நள்ளிரவு ஹரியானாவின் ஜஜ்ஜாரில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

ஹரியானாவின் நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வரை உணரப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான நிலநடுக்கம் என்பதால் ஹரியானா மற்றும் டெல்லி பகுதியில் எந்த

காயங்கள் அல்லது சேதங்கள் குறித்தும் தகவல் இல்லை. நிலநடுக்கத்தை பொறுத்தவரை 3.8 ரிக்டர் அளவு  பதிவாகியுள்ளது. 01-01-2023 ஆகிய இன்று நள்ளிரவு 01:19:42 IST மணி அளவில் இந்த நிலா நடுக்கம் ஏற்பட்டது.   நிலநடுக்க மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி , நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை 28.71 மற்றும் தீர்க்கரேகை: 76.62, என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல நிலநடுக்கத்தின் ஆரம்ப புள்ளி ஹரியானாவின் ஜஜ்ஜார்பகுதியில்  இருந்து  12 கிமீ வடமேற்கில் தரைமட்டத்தில் இருந்து  5 கிமீ ஆழத்தில் உருவானதாக   நேஷனல் நிலநடுக்க ஆய்வகம் தெரிவித்தது. முன்னதாக நவம்பர் 12 ஆம் தேதி, டெல்லி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) படி, நவம்பர் 12 நிலநடுக்கம் நேபாளத்தில் இரவு 7:57 மணியளவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக இருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்தது என  கூறியுள்ளது.அதை ஒப்பிடுகையில் இதன் தீவிரம் மிகக்குறைவு தான்.

First published:

Tags: Delhi, Earthquake