சொட்டுநீர் பாசனத்தில் மரம் வளர்ப்பு: கால்நடை மருத்துவர்களின் முயற்சி

முதலில் கால்நடைகள் இளைப்பாறுவதற்காக மரங்கள் நட்டுவந்த இவர்கள், தற்போது சுற்றுச்சூழல் மற்றும் மழை பொழிவதற்காகவும் மரங்களை பேணி காப்பதாக கூறுகின்றனர்.

Web Desk | news18
Updated: August 24, 2019, 1:33 PM IST
சொட்டுநீர் பாசனத்தில் மரம் வளர்ப்பு: கால்நடை மருத்துவர்களின் முயற்சி
சொட்டுநீர் பாசனம்
Web Desk | news18
Updated: August 24, 2019, 1:33 PM IST
தண்ணீர் பாட்டில் மற்றும் எண்ணெய் கேன் போன்ற பொருட்களை கொண்டு, சொட்டுநீர் பாசனத்தின் மூலம் வித்தியாசமான முறையில் ஓசூரைச் சேர்ந்த 2 கால்நடை மருத்துவர்கள் மரம் வளர்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை எந்த நீர்நிலைகளை கண்டாலும் வறட்சி என்ற நிலை ஒருபுறம் இருக்க, ஓசூரில், 2 கால்நடை மருத்துவர்களான ஜெயச்சந்திரன் மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மரம் வளர்த்து வருகின்றனர்.

வீணாகி போன தண்ணீர் பாட்டில், எண்ணெய் கேன் மற்றும் GLUCOSE TUBE போன்ற பொருட்களை கொண்டு, இந்த மருத்துவர்கள் மரங்களுக்கு நீர் விட்டு வருகின்றனர் . முதலில் கால்நடைகள் இளைப்பாறுவதற்காக மரங்கள் நட்டுவந்த இவர்கள், தற்போது சுற்றுச்சூழல் மற்றும் மழை பொழிவதற்காகவும் மரங்களை பேணி காப்பதாக கூறுகின்றனர்.


சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மரம் வளர்ப்பு


கால்நடை மருத்துவர் ஜெயச்சந்திரன் கூறுகையில், பார்ப்பதற்கு சிறிய வகை டேங்குகள் போன்று தோன்றும் இந்த பொருட்கள், சுமார் 5 லிட்டர் வரை தண்ணீர் சேமிக்கிறது. இதனை மரங்களுடன் கட்டியபின்பு, இதன்மூலம் சொட்டு சொட்டாக 4 நாட்களுக்கு, மரங்களின் வேர் வரை நீர் பாய்கிறது என்றார்.

மரம் வளர்த்தால் மழை பொழியும், மழை பொழிந்தால் நீர் பெருகும் என்ற இயற்கையின் தத்துவத்தின் அடிப்படையில் மரங்களை இந்த மகத்தான மருத்துவர்கள் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

மேலும் படிக்க... மழைநீர் சேமிப்பால் கோடையிலும் சமாளிக்கும் வேலூர் மருத்துவ தம்பதிகள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...